நாமக்கல்: நாமக்கல் அருகே, நேற்று அதிகாலை, கர்நாடக மாநில அரசு பஸ், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில், ஐயப்ப பக்தர்கள் இருவர் மற்றும் கர்நாடக மாநில அரசு பஸ் டிரைவர் உயரிழந்தனர். ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், விஜயகுமரன், 40. இவர் உட்பட எட்டு பேர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, நேற்று முன்தினம், டவேரா காரில் புறப்பட்டனர். அதே பகுதியை சேர்ந்த ரபீக் என்பவர், காரை ஓட்டினார். சேலம் - நாமக்கல் பைபாஸ் புதுச்சத்திரம் பாலம் அருகே, அதிகாலை, 4:00 மணிக்கு, சாலை ஓரம் காரை நிறுத்தி, விஜயகுமரன் மற்றும் உடன் வந்த அவரது நண்பர், வடமாலை கிருஷ்ணமூர்த்தி, 45, ஹரிகிருஷ்ணன், 35, ஆகியோர், காருக்கு அருகே பாய் விரித்து படுத்து தூங்கினர்; மற்றவர்கள் காரிலேயே தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை, 4:15 மணியளவில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து வந்த அம்மாநில அரசு பஸ், புதுச்சத்திரம் பாலம் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் தள்ளப்பட்ட லாரி, சாலையோரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்த, ஐயப்ப பக்தர்கள் மீது ஏறி, அருகே இருந்த அவர்களது கார் மீதும் மோதியது. இதில், சாலையோரம் படுத்திருந்த ஐயப்ப பக்தர்கள் விஜயகுமரன், அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கர்நாடக அரசு பஸ் டிரைவர் மோகன் ரத்தோர், 30, பரிதபமாக உயரிழந்தனர்.
காயமடைந்த, கார் டிரைவர் உட்பட, ஐயப்ப பக்தர்கள் ஆறு பேர், நாமக்கல் தனியார் மருத்துவமனையிலும்; கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தை சேர்ந்த அரசு டாக்டர் தம்பதியினர் உட்பட, அரசு பஸ் பய ணிகள் மூவர், சேலம் தனியார் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.போலீஸ் எஸ்.பி., மற்றும் ஏ.டி.எஸ்.பி., ஆகியோர், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசராணை நடத்தினர். புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மாநாட்டுக்கு வந்த கர்நாடகா டாக்டர்கள் : கன்னியாக்குமரி மாவட்டத்தில், நாளை, இந்திய தேசிய மருத்துவ கவுன்சில் மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காக, கர்நாடக மாநிலம் ஹசன், மாண்டியா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார்
டாக்டர்கள், அம்மாநில அரசு பஸ்சை வாடகைக்கு எடுத்து வந்துள்ளனர். விபத்து காரணமாக, அந்த டாக்டர்கள் மாநாட்டில் பங்கேற்காமல், கர்நாடகாவுக்கு திரும்பிச் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.