சென்னை: மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, அலைபேசியில் படம் பிடித்து, வீட்டை ரகசிய நோட்டமிட்ட, கேரள மாநில வாலிபரிடம், கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மூவாத்துப்புளையைச் சேர்ந்தவர் அமீர்தவாகா, 34. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, அலைபேசியில் படம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். போலீசார் அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தன்னை படம் பிடித்தவரை மன்னித்து விட்டு விடும்படி, சிதம்பரம் கேட்டுக்கொண்டதன் பேரில், போலீசார் அவரை விடுவித்தனர். நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள அந்த வாலிபர், கடந்த 18ம் தேதியில் இருந்து, விமான நிலைய காவல் நிலையத்தில், தினமும் கையெழுத்துப் போட்டு வருகிறார். இதற்கு முன், அமெரிக்க போயிங் நிறுவனம் தயாரித்த மிகப்பெரிய, "ட்ரீம் லைன்' விமானத்தை, நண்பருடன் படம் பிடித்து, போலீசில் மாட்டிக் கொண்டார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன், நுங்கம்பாக்கம் பைகிராப்ஸ் தோட்டத்தில் உள்ள, மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டை ரகசியமாக நோட்டமிட்டுள்ளார். அவரிடம், ஆயிரம் விளக்கு மற்றும், "கியூ' பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "பேஸ் புக்கில் இடம்பெற செய்வதற்காகவே மத்திய அமைச்சரை படம் பிடித்தேன். என்னை மன்னித்து விடும்படி அவர் கூறியதை அறிந்து, அதற்காக நன்றி தெரிவிக்க வந்தேன். மேலும், சென்னையில் தங்கி கையெழுத்து போடுவது சிரமாக உள்ளதால், வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும் என, கேட்டுக்கொள்ள நேரில் சந்திக்க, வீட்டுப்பக்கம் வந்தேன்' என, தெரிவித்துள்ளார். இந்த வாலிபர் மீது சந்தேகம் வலுத்துள்ளதால், "கியூ' பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.