கோவை: "நாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம். நீங்கள் இருவரும் பாட்டி வீட்டுக்குச் சென்று விடுங்கள்' என, குழந்தைகளிடம் கூறிவிட்டு, கோவையில் தம்பதியர், "சயனைடு' தின்று, தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லையால், இத்துயரம் நடந்ததாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார், 39. மனைவி அகிலாண்டேஸ்வரி, 32, மகன் விமல் 13, மகள் சுவேதா, 12, ஆகியோருடன் கோவை, சாய்பாபாகாலனி, பாரதி பார்க் ரோடு, ஜவகர் நகரில், வாடகை வீட்டில் வசித்து வந்தார். காந்திபார்க்கில் உள்ள செல்வராஜ் என்பவரின் நகை பட்டறையில், வேலை செய்தார். சொந்தமாக பட்டறை துவக்கும் எண்ணத்தில், வட்டிக்கு கடன் வாங்கினார். எதிர்பார்த்த "ஆர்டர்' கிடைக்காததால், பட்டறை துவக்காமல் வேலைக்குச் சென்றார். இந்நிலையில், சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதமிருந்தார். நேற்று முன்தினம் இரவு, மனமுடைந்த நந்தகுமார், "மாலை' அணிந்திருந்த நிலையிலும் குடிபோதையில் வீட்டிற்குச் சென்றார்; மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. நேற்று காலை, டிபன் சாப்பிட்டு முடித்ததும் மகன், மகளை அழைதது "நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம். நீங்கள் பாட்டி வீட்டிற்கு போய்விடுங்கள்' என்று கூறியுள்ளார்.
பயந்த குழந்தைகள் அருகிலுள்ள பாட்டி வீட்டிற்குச் சென்று, அழைத்து வந்தனர். உறவினர்கள், வீட்டிற்கு வந்து பார்த்தபோது நந்தகுமாரும், மனைவி அகிலாண்டேஸ்வரியும், கட்டிலில் பிணமாக கிடந்தனர். கட்டில் அருகில் பிராந்தி பாட்டில், டம்ளர் கிடந்தது. இருவரும் "சயனைடு' தின்று தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.
நந்தகுமாரின் உறவினர்கள் கூறுகையில், "இன்று காலை, பெருமாள் கோவிலுக்கு சென்று திரும்பிய நந்தகுமார், குழந்தைகளிடம் சிறிது நேரம் பேசியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில், தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர். நகைகளை விற்று, தனது கடன் பிரச்னையை சமாளித்து விட்டனர். எனினும், குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு, அவர்கள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியாக உள்ளது' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.