சிதம்பரம்: சிதம்பரத்தில் நான்காவது மாடியில் இருந்து விழுந்து இறந்த இளம்பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த மஞ்சக்குழி மதுரா சம்மந்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சந்தியா, 23; இவர் சிதம்பரம் மேலவீதியில் உள்ள காம்ப்ளக்சில், வண்டிக்கேட் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் அபிநயா போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்தவர், மதியம், 1:00 மணிக்கு, திடீரென, நான்காவது தளத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தார். திடுக்கிட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கூடியதால், போக்குவரத்து பாதித்தது. உடன் உயிருக்குப் போராடிய, சந்தியா, சிதம்பரம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், மொட்டை மாடியில் சந்தியா அணிந்திருந்த வளையல்கள் சிதறியும், ஹேர் பின்னும் கிடந்தன. சந்தியா கீழே விழந்த இடத்திலும், அதே போன்ற வளையல் மற்றும் ஹேர் பின் கிடந்தது. இறந்த சந்தியா மொட்டை மாடிக்கு ஏன் சென்றார், எப்படி விழுந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஸ்டூடியோ உரிமையாளர் விஜயகுமாரிடமும் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.