வேலூர்: சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் ரயில் முன் பயணிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். ரயில்வே ஸ்டேஷன் மீது சிலர் கல்வீசி ரகளை செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு செல்லும் பயணிகள் ரயில், தினமும் காலை, 7.30 மணிக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணத்துக்கு மின்சார ரயில் வரும்.
இந்த ரயிலில் வரும் பயணிகள் பலர் சீசன் டிக்கெட் மூலம், ஆந்திரா செல்லும் பயணிகள் ரயிலில் ஏறி கடப்பா செல்வர்.
இதனால், மின்சார ரயில் வந்த பின்னரே ஆந்திரா செல்லும் ரயில் புறப்படும். சில நேரம் மின்சார ரயில், 10 முதல், 20 நிமிடம் வரை தாமதமாக வந்தால் கூட, அதில் வரும் பயணிகள் நன்மைக்காக ஆந்திர ரயில் நிற்கும். பல ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்து வருகிறது.நேற்று சென்னையில் இருந்து வரும் மின்சார ரயில், 7.30 மணிக்கு வரவில்லை. 10 நிமிடம் தாமதமாக வருவதாக அறிவித்தனர். ஆனால், ஆந்திரா செல்லும் பயணிகள் ரயில் குறித்த நேரத்தில் புறப்பட்டு
சென்றது. மின்சார ரயில், 7.40 மணிக்கு வந்தது. அப்போது, கடப்பா செல்லும் பயணிகள், ஆந்திரா ரயில் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். ஆத்திரமடைந்த மின்சார ரயிலில் வந்த நூற்றுக்கணக்கான பயணிகள், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, ரயில்வே மேனேஜர் முருகேசன் வந்தார். அவரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் ரயில்வே ஸ்டேஷன் மீது கற்கள் வீசி ரகளையில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. இதை பார்த்த பயணிகள் அங்கிருந்து ஓடிச் சென்று ரயில் முன் உட்கார்ந்து மறியல் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீஸார், ரயில்வே அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். "சென்னையில் இருந்து மின்சார ரயில் வர தாமதமானால், 10 நிமிடம் வரை ஆந்திரா செல்லும் பயணிகள் ரயிலை நிறுத்தி வைக்க வேண்டும்' என, பயணிகள் வைத்த கோரிக்கையை, ரயில்வே அதிகாரிகள் ஏற்றனர். பின்னர் கடப்பா செல்லும் பயணிகள், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிச் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.