விருதுநகர்: விருதுநகர் பகுதியில், லாரிகளை வழிமறித்து கொள்ளையடித்த டவுசர் கொள்ளையர் நான்கு பேரை, விருதுநகர் போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர். விருதுநகர், பட்டம் புதூர் நான்கு வழிச்சாலையில் டிச., 12 ல், கன்னியாகுமரியிலிருந்து திருச்சிக்கு மணல் ஏற்ற சென்ற லாரியை வழிமறித்து, டிரைவர் சதீஷ்குமாரை மரத்தில் கட்டிவைத்து, 22 ஆயிரம் ரூபாய், இரண்டு மொபைல் போன்களை டவுசர் மட்டும் அணிந்திருந்த கொள்ளையர்கள் பறித்து சென்றனர். பின், மல்லாங்கிணர் நான்கு வழிச்சாலையில், இரண்டு லாரிகளை மடக்கி, டிரைவர்களிடமிருந்து 9 ஆயிரம் ரூபாயை அதே கொள்ளையர்கள் பறித்து சென்றனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் திருமங்கலம், டி. புதுப்பட்டியை சேர்ந்த மனோகரன், 32,மார்நாடு, 24, முத்துப்பாண்டி,30, பாலமுருகன், 32, ஆகியோர் கல்லுப்பட்டி பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்திருந்தனர். தினமும் திருமங்கலம் சப் கோர்ட்டில், கையெழுத்திட்டு வந்த இவர்கள், இரவில் நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்களை மடக்கி, வழிப்பறி செய்தது தெரிய வந்தது. நால்வரையும் இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையிலான போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.