கீழத்தூவல்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கணவன் சந்தேகப்பட்டதால், உறவினருடன் சென்ற மனைவி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். முதுகுளத்தூர் அருகேயுள்ள புதுப்பட்டணத்தை சேர்ந்த அய்யப்பனுக்கும், 32, இதம்பாடலை சேர்ந்த பிரியங்கா ஈஸ்வரிக்கும், 22, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவர் இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டினார். இதில் மனமுடைந்த பிரியங்கா ஈஸ்வரி, தனது வீட்டருகே வசிக்கும், கணவரது தம்பியின் உறவினரான ராம்குமாருடன்,26, மூன்று நாள்களுக்கு முன் சென்றார். மனைவியை காணவில்லை என, அய்யப்பன், கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி, ராம்குமாருடன் தலைமறைவாக இருந்த பிரியங்கா ஈஸ்வரியை மீட்ட, கீழத்தூவல் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார், முதுகுளத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். "கணவருடன் இனி வாழ மாட்டேன், எனது பெற்றோருடன் செல்வதாக பிரியங்கா கூறினார். மாஜிஸ்திரேட் மோகன்ராம், அனுமதிபடி, கவிதா, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.