திருப்புவனம்: ஓடும் பஸ்சில் மானாமதுரை போலீஸ் ஏட்டுவை, கத்தியால் கீறியவரை, திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். திருப்புவனம் புதூர் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ஜஹாங்கீர், 45; மானாமதுரை ஸ்டேஷனில் ஏட்டாக உள்ளார். இவரும், திருப்பாச்சேத்தி சிறப்பு எஸ்.ஐ.,யும், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, மானாமதுரையிலிருந்து பஸ்சில், திருப்புவனம் வந்தனர். இதே பஸ்சில், ராமநாதபுரம் மாவட்டம், உச்சப்புளி அருகேயுள்ள அகஸ்தியர்கூட்டம், முனியசாமி மகன் ஆண்டி ஆனந்தன், 38, இவர்களை கவனித்து கொண்டே வந்துள்ளார். திருப்பாச்சேத்தியில் எஸ்.ஐ., இறங்கி விட்டார். பஸ்சில் திருப்புவனம் வந்த ஏட்டு ஜஹாங்கீருக்கும், ஆண்டி ஆனந்தனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏட்டு,"டேய், நான் போலீஸ், என்னிடமே தகராறு செய்கிறாயா' என்று கேட்டுள்ளார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகளும் சத்தம் போட்டுள்ளனர். கோபமடைந்த "ஆண்டி' கையில் இருந்த கத்தியால், ஜஹாங்கீர் கழுத்தில் இரண்டு இடத்தில் கீறிவிட்டு, தப்பியோட முயற்சித்தார். உடனே, திருப்புவனம் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்ததால், பஸ் ஸ்டாப்புக்கு வந்த போலீசார் காயமடைந்த ஏட்டுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரன், ஆண்டி ஆனந்தனை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.