சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி அரசு பள்ளி மாணவியிடம் "சில்மிஷம்' செய்த உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் குமாரை,"சஸ்பெண்ட்' செய்து சி.இ.ஓ.,ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். கீழடி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தவர், சுரேஷ்குமார். இவர், சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு அருகேயுள்ள மைதானத்திற்கு கோ-கோ விளையாட்டு பயிற்சிக்காக சில மாணவிகளை அழைத்து சென்றார். அப்போது, கழிப்பறையில் வைத்து ஒரு மாணவியை முத்தமிட்டு, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, அவர் மீது புகார் எழுந்தது. மாணவியின் பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தும், நடவடிக்கை தாமதமானதால், சி.இ.ஓ., ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரது உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் கலாவள்ளி டிச., 22 ல், கீழடி பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் தங்கவேலு, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், ஊர் முக்கிய பிரமுகர்களிடம் விசாரித்த போது, சம்பவம் உண்மையென,தெரிய வந்தது. இவரது அறிக்கையின் அடிப்படையில், திருப்புவனம் போலீசார், சுரேஷ்குமார் மீது வழக்கு பதிந்து, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர். இந்நிலையில்,"சில்மிஷ' ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து,
சி.இ.ஓ.,ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.