Advertisement
திருப்புவனத்தில் மூடைகளாக மணல் கடத்தல் தொடர்கிறது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,01:05 IST

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை விதித்துள்ளதால், தலைச்சுமையாய் மணல் கடத்தல் தொடர்கிறது. திருப்புவனம் வைகை ஆற்றில் மணல் சுரண்டலால், நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்பட்டது. இயற்கை வளத்தை பாதுகாக்க மதுரை ஐகோர்ட், வைகை ஆற்றில் மணல் அள்ள தடை விதித்துள்ளது. இதனையும் மீறி மாட்டுவண்டிகளில் வைகை மேம்பாலத்தை ஒட்டியும்,குடிநீர் திட்டங்கள் அருகேயும் மணல் அள்ளினர். சில மாதத்திற்கு முன் மணல் அள்ள வருவாய்த்துறை நிரந்தரமாக தடை விதித்தது. இந்நிலையில், மணல் கடத்துவதற்கு புதுப்புது உத்திகளை மணல் புரோக்கர்கள் கையாள்கின்றனர். கூலிக்கு ஆட்கள் அமர்த்தி, பிளாஸ்டிக் சாக்கில் மணல் நிரப்பி, டிரை சைக்கிளில் கடத்துகின்றனர். ஆற்றிலேயே சல்லடை வைத்து சலித்து கட்டுமான வேலைக்கு தகுந்த மணலாக மாற்றி, சிறு சிறு மூடைகளாக எடுத்து செல்கின்றனர். அரசு கட்டட பணிக்கு என அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை தவறாக பயன்படுத்தி மணல் கடத்துவது அதிகரித்துள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.