கோவை : குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு லைசென்ஸ், மின் இணைப்பு விரைந்து பெற்றுத்தர, கலெக்டர் தலைமையில், "ஒற்றைச்சாளர இடர்நீக்கக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. நகர் மற்றும் ஊரமைப்புத் துறையால் தொழில் வகைப்பாடு மற்றும் வகைப்பாடு செய்யப்படாத நிறுவனங்களில், சொந்தமாக கட்டடம் கட்டி, இயந்திரங்கள் நிறுவி, தொழில் நிறுவனங்கள் செயல்
படுகின்றன.
புதிதாக நிறுவப்படும் தொழில் நிறுவனங்களுக்கும், ஏற்கனவே நிறுவப்பட்டு விரிவாக்கம் செய்யப்படும் நிறுவனங்களுக்கும்,பல்வேறு துறைகளிடம் இருந்து லைசென்ஸ் மற்றும் சான்றிதழ்கள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
நகர ஊரமைப்பு, சுகாதாரப் பணிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள், மாசுக்கட்டுப்பாடு வாரியம், தொழிற்சாலைகளின் ஆய்வாளர், மின்வாரியம், உள்ளாட்சி அமைப்புகள், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் பிற துறைகளில் இருந்து லைசென்ஸ் பெற வேண்டும்.
இதில், கால தாமதம், வீண் அலைச்சல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் இருப்பதாக தொழில் அமைப்புகள் கவலை தெரிவித்திருந்தன. இதற்கு தீர்வு காணும் விதத்தில், கலெக்டர் தலைமையில், "ஒற்றைச்சாளர இடர் நீக்கக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நகர ஊரமைப்பு, சுகாதாரப் பணிகள், தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து தேவையான சான்றிதழ்கள், உத்தேச வரைபட ஒப்புதல், இயந்திரங்கள் நிறுவன லைசென்ஸ், மின் இணைப்பு வசதிகளை ஒற்றைச்சாளர இடர் நீக்கக் குழு விரைந்து பெற்றுத்தரும். சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இத்துறைகளின் உரிமங்களை பெற தொழில்முனைவோர் மாவட்ட தொழில் மையத்தில் ஐந்து ரூபாய் செலுத்தி, விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து,
உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை மாவட்ட தொழில் மையம் சம்பந்தப்பட்ட துறைகளின் பரிசீலனைக்கு அனுப்புகிறது.
பல்வேறு துறைகளிடம் இருந்து லைசென்ஸ் பெறப்பட்ட பின், மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைத்து இறுதி ஒப்புதல் வழங்க, நகராட்சி அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு பரிந்துரைக்கிறது. இதில், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையும், ஒப்புதல் மற்றும் கருத்துக்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படும் விண்ணப்பங்கள், ஒவ்வொரு மாதமும் குழுக் கூட்டத்தில் வைக்கப்பட்டு, அதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்
படும்.
பின், இடர்பாடுகள் களையப்பட்டு, லைசென்ஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இக்குழுவின் சேவைகளை பெற்று, தொழில்முனைவோர் பயனடையலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.