DISTRICT NEWS | கட்டுமான பொருட்கள் விலை "ஏற்ற இறக்கம்':இழுபறியில் தொகுப்பு வீடுகள் பணி| Dinamalar

தமிழ்நாடு

கட்டுமான பொருட்கள் விலை "ஏற்ற இறக்கம்':இழுபறியில் தொகுப்பு வீடுகள் பணி

Added : டிச 26, 2012
Advertisement

பொள்ளாச்சி : கட்டுமான பொருட்களின் விலை ஏற்ற, இறக்கத்தால், ஊராட்சிகளில் தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகள் இழுபறியாகி வருகிறது. இதனால், குறித்த நேரத்தில் பணிகள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள ஊராட்சிகளில், மக்கள் தொகையை பொறுத்து மத்திய அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுகின்றன.தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு அரசு மானியமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் இரும்புகம்பி, மணல், சிமென்ட் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், அரசு ஒதுக்கும் மானியத்துக்குள், கட்டுமான பணிகளை நிறைவு செய்ய முடியாமல் பயனாளிகள் தவித்து வருகின்றனர்.பயனாளிகள் தரப்பில் கூறியதாவது:கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், அரசு குறிப்பிட்ட 200 சதுர அடி வீடு கட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஒதுக்கப்படும் மானியத்தை விட, கூடுதலாக ஒன்றரை லட்சம் வரை கூடுதல் செலவிட வேண்டியுள்ளது. இதில், மணல், செங்கல் உள்ளிட்ட பொருட்களுக்கும், ஆட்கள் கூலிக்கும் அதிக தொகை ஒதுக்க வேண்டியுள்ளது. மாநில அரசின் திட்டம் போன்று
மத்திய அரசே முழு பொறுப்பேற்று பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். இல்லாவிடில், மானியத்தை அதிகரிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு நான்கு கட்டமாக மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு ஆவணம் சமர்ப்பித்தாலும், குறித்த நேரத்தில் தொகை கிடைக்காததால், மீதமுள்ள பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். அதேசமயத்தில், கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் வலியுறுத்துவதால், பயனாளிகள் திணறி வருகின்றனர். பல பயனாளிகள் பணிகளை பாதியில் கைவிட்டுள்ளதால், குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல ஊராட்சிகளில், நிலுவையில் உள்ள கட்டுமான பணிகளை, ஊராட்சி தலைவர்களின் உதவியுடன் பயனாளிகள் தொடர்ந்து வருகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "மத்திய அரசின் தொகுப்பு வீடுகள் கட்டும் பணிக்கு, முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தால், ஒன்றிய பொறியாளர், மேற்பார்வையாளர் மூலம் ஆய்வு செய்து உறுதி செய்யப்படும். அதன்பின், ஆவணங்களை சரிபார்த்து மானியம் வழங்கப்படும்.
பயனாளிகளின் நிலை குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பயனாளிகள், வீடுகளை ஆர்வமுடன் கட்டி வருகின்றனர். ஆதிதிராவிட பயனாளிகள் பலர் வீடு கட்ட முன்வராததால், அந்தந்த ஊராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை