மதுரை: ""மது எனும் அரக்கனால், தினமும் செத்துப் பிழைக்கும் பெண்களால், தமிழகத்தில் பெரும் கிளர்ச்சி எழும்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ பேசினார். மதுவிலக்கு கோரி, வைகோவின் நடைபயணம், மதுரையில் நேற்று, நிறைவுற்றது. அதை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். நகர்
செயலாளர் பூமிநாதன் வரவேற்றார்.
வைகோ பேசியதாவது: எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை. டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியை, மது அருந்திய ஏழு பேர், பாலியல் பலாத்காரம் செய்தனர். மது அருந்தியதால், இவர்கள் மனிதர்களாக இல்லை. தூத்துக்குடி பள்ளிச்
சிறுமி புனிதாவை, மது அருந்திய கொடூரன் அழித்தான். நான்கு வயது பச்சிளம் குழந்தையை குடிகாரன் சீரழித்துள்ளான். மிருகங்களை நான் இழிவாக பேசமாட்டேன்; ஆனால், மிருகங்கள் இதை செய்யாது. இதை எந்த சட்டத்தால், தடுக்கப் போகின்றனர்; இவர்களால் தடுக்க முடியாது. காமராஜர் பள்ளிகளை திறந்தார்; அண்ணாதுரை கல்லூரிகளை திறந்தார். ராஜாஜி கவர்னராக இருந்தபோது, முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்து, மது விலக்கை அமல்படுத்தும்படி கோரினார். அதற்கு, கருணாநிதி, ""மற்ற மாநிலங்களில் மது விலக்கு அமல் படுத்தினால், தமிழகத்திலும் மது விலக்கு அமல்படுத்தப்படும்,'' என்றார். இதுகுறித்து ராஜாஜி கூறும்போது, ""நம்பிக்கையுடன் சென்றேன்; தற்போது மனக்கலக்கத்தில் உள்ளேன்,'' என மனம் வெதும்பினார். மது எனும் அரக்கனால், தினமும் செத்துப்பிழைக்கும் பெண்களால், தமிழகத்தில் கிளர்ச்சி எழும். "சூப்பர்' மதுக்கடைகளை திறக்க விடமாட்டோம், என்றார். பாதிரியார் அருள், துணை பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா,துரைபாலகிருஷ்ணன், பொருளாளர் மாசிலாமணி, கொள்கை விளக்க அணிச் செயலாளர் அழகுசுந்தரம், நிர்வாகிகள் முகமதுமின்னல் அலி, மகபூப்ஜான், எஸ்.ரஞ்சித்குமார், கே.முருகன், விடியல் நண்பர்கள் குழு கலந்து கொண்டனர். மாவட்ட அவைத்தலைவர் சின்னசெல்லம் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.