பாலமேடு: பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு கூடுதல் பஸ் மற்றும் சுகாதார வசதி குறித்த, கிராம கமிட்டி கூட்டம், தலைவர் அழகப்பன் தலைமையில் நடந்தது. செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். ஜன., 15ல் பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதற்காக, மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாலமேட்டிற்கு சிறப்பு பஸ்களை இயக்க, துறை அலுவலர்களுக்கு மனு கொடுப்பது; பேரூராட்சி நிர்வாகம் சார்பில், சுகாதார ஏற்பாடு செய்து தரக்கோருவது; ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் மஞ்சமலை ஆற்றுபகுதியினை சுத்தம் செய்வது; வாடிவாசல் கட்டடம் மராமத்து செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றினர். நிர்வாக குழு உறுப்பினர் கருப்பையா நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.