மதுரை: ""தாயுடன் வாழும் 15 மாத குழந்தையை, நாகர்கோவிலை சேர்ந்த தந்தை, வாரந்தோறும் குழித்துறையில் பார்க்கலாம்,'' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நாகர்கோவிலை சேர்ந்தவர் நிஷாத். இவரது மனைவி ஷாஜிலாபீவி. நிஷாத், ""எனது 15 மாத குழந்தை மனைவியுடன் உள்ளது. குழந்தையை நான் சந்திக்க, மனைவிக்கு உத்தரவிட வேண்டும்,'' என, சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் மனு செய்தார். திங்கள், வெள்ளியில் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆணைக்குழு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஷாஜிலாபீவி மனு செய்தார். வாரந்தோறும் திங்களில், பத்மநாபபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு முன்னிலையில், குழந்தையை நிஷாத் சந்திக்கலாம் என உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து நிஷாத், "நான் வியாபாரம் செய்கிறேன். வாரத்தில் 2 நாட்கள், எனது பராமரிப்பில் இருப்பதில் சிரமமில்லை. என்னிடம் இருந்தால்தான், தந்தை என என்னை குழந்தை அங்கீகரிக்கும். இல்லாதபட்சத்தில், என்னை மறந்துவிடும்,' என ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். ஷாஜிலாபீவி,""குழந்தையை கோர்ட்டில் சந்திப்பது, சுமூகமான சூழ்நிலையாக இருக்காது. குழந்தை மனதில், தீராத காயத்தை ஏற்படுத்தும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியுள்ளது. நான் களியாக்காவிளையில் வசிக்கிறேன். பத்மநாபபுரம் செல்லும்போது பயணக்களைப்பு ஏற்படும். குழித்துறையில் சந்திக்கலாம். கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,'' என மனு செய்தார். நீதிபதி ஜி.ராஜசூர்யா பிறப்பித்த உத்தரவு: குழந்தையை பார்க்க தந்தைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை மறுக்க முடியாது. வாரம் 2 முறையிலிருந்து ஒருமுறை பார்க்கலாம் என்ற
உத்தரவு தற்காலிக ஏற்பாடுதான். களியக்காவிளையிலிருந்து பத்மநாபபுரத்திற்கு 30 கி.மீ.,பயணம் செய்ய வேண்டும். ஆனால், களியக்காவிளை-குழித்துறை இடையேயான தூரம் 7 கி.மீ. வாரத்தில், ஒருநாள் தந்தை சந்திப்பது என்பது, பெயரளவிற்கு பார்த்து மாதிரி இருக்கும். தற்காலிகமாக 2 மாதங்களுக்கு வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் குழித்துறை கோர்ட்டில், குழந்தையை தந்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.