புதுடில்லி : இந்தியாவின் வடமாநிலங்களில் பாயும் கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், குளிப்பதற்கு ஏற்ற தகுதி கூட இல்லாத அளவிற்கு மாசடைந்துள்ளதாக அரசு சாரா அமைப்பு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பத்மஸ்ரீ விருது வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் ஜோஷி தலைமையில், டேராடூனில் இயங்கி வரும் ஹெஸ்கோ என்ற அரசுசாரா அமைப்பு, இந்தியாவின் வடக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் ஓடும் நதிகள் குறித்து ஆய்வு நடத்தும் பொருட்டு, அப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 27 நாட்கள் இவர்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது, இக்குழு, 1,800 கி.மீ அளவிலான தூரத்தை கடந்து அங்கு ஆய்வை மேற்கொண்டது.
தாங்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து அனில் ஜோஷி கூறியதாவது, நாங்கள் உத்தரபிரேதசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 24 நதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டோம். இம்மாநிலங்களில் ஒடும் நதிகள், மக்கள் குளிப்பதற்கு உண்டான தகுதி கூட இல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது. இந்நதிகளில் பெருமளவு சாக்கடை நீரே ஓடுகிறது. இதன்மூலம், அதனை சார்ந்து வரும் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் யமுனை, வருணா, கண்டாக் உள்ளிட்ட நதிகள் அதிக மாசடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நதிகள் ஓடும் பகுதிகளில், தொடர்ந்து மாசு அதிகரித்து வருவதன் மூலம், நீர் மற்றும் நில சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் அசாதாரண மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.
தீர்வு : பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வழிகோலுகிறதோ, அதேபோல,இயற்கை நீர் வளங்களான இத்தகைய நதிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை காக்கும் பொருட்டு, ஜி.இ.பி எனப்படும் மொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற திட்டத்தை அரசு வகுத்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.
தாங்கள் மேற்கொண்ட ஆய்வின் சாராம்சங்களை ஒரு அறிக்கையாக தயாரித்து பிரதமர் அலுவலகம் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விரைவில் அனுப்ப உள்ளதாக ஜோஷி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியா புனித பூமிதான் ஒரு காலத்தில்.. இன்று?? இங்கு 'பூமி' எனும் வார்த்தை மண்ணை மட்டுமா குறிக்கிறது?... வாழும் மக்களையுமல்லவா குறிக்கிறது... சில ஆறுகளில் நீரே இல்லை... பல ஆறுகளில் நீரிருந்தும், அது நீராக இல்லை... மக்கள் மனம் மாசு பட, மாசு பட... அவர்கள் தொட்டதெல்லாம்... அவர்களைத்தொட்டதேல்லாம் மாசுபடத்தானே செய்யும்
இந்தஆய்வினை அரசு ஏற்று நடத்தி இருந்தால் உண்மைக்கு புறம்பான கருத்துகளே வந்திருக்கும், நம் மக்கள் காலம் முழுவதும் சாக்கடையிலேயே குளிக்கட்டும் என்று உண்மை மூடி மறைக்கபடும், கங்கை,யமுனை,வருணா,கோதாவரி,கண்டாக்,போன்ற இன்னும் பல நதிகளின் பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம், தமிழ்நாட்டின் நதிகளின் பெயர்களை தவிர. தண்ணீர்தான் வர மறுக்கிறதே, ஆற்றில் ஓடும் நீரை கூட நமது மக்கள்,வெளிநாட்டினர், புண்ணியமாக வணங்குகின்றனர். ஆனால் நதிகளின் நிலைமையோ இவ்வாறு இருக்கிறது. இவைகள் அனைத்து சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது, மிகபெரிய புன்னியஸ்தலங்களின் நதிகளின் நிலைமை வருத்ததிற்குரியதாக உள்ளது, ஹிந்து கோயில்களின் உண்டியல் காசு எங்கு கொண்டு கொட்டபடுகிறது என்று தெரியவில்லை. அரசு சொந்தபணத்தை செலவு செய்ய தேவையில்லை, கோவில்களில் வரும் 25% உண்டியல் பணதையாவது செலவு செய்து புண்ணியமாவது தேடிகொள்ளலாம்.
முதலில் கங்கையில் பாதி எரிந்த பிணங்களை மிதக்க செய்வதையும், தொற்று நோய் பாதித்து மரணமடைந்த சவங்களை எரிப்பதையும் நிறுத்துவதற்கு சட்டம் இயற்றுங்கள். வைதீக இந்துக்கள் செய்யும் அசுத்தம் சொல்லி மாளாது. நதி நீர், குடிக்க, விவசாயம் செய்ய முன்னுரிமைப்படி உபயோகப்படுத்தப்பட வேண்டும். மத முட்டாள் தனங்களுக்கு அல்ல.....வட இந்திய நதிகளில்தான் இத்தனை அசிங்கங்களும். [நிர்வாண சாமியார்கள் செய்யும் அட்டகாசங்கள் தனிக்கதை.....கேட்க சகிக்காது...] செம்பியன் தமிழவேள். திருவள்ளூர்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.