அனுப்பர்பாளையம் : திருப்பூர்
வடக்கு பகுதியில் உள்ள, 30 ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளுக்கான மின் கட்டணம் செலுத்தாத தால், இணைப்பு
துண்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை சம்பந்தப்பட்ட
ஊராட்சி நிர்வாகத்தினர் செலுத்தி வந்தனர். பெரும்பான்மையான பள்ளிகளுக்கான
மின் கட்டணம் இன்னும் செலுத் தப்படாமல் உள்ளது. வடக்கு பகுதியில் உள்ள
ஊராட்சிகளில் 30 ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மின்
கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால், அப்பள்ளிகளில் மின் இணைப்பு
துண்டிக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் பாடத்திட்டத்தில் ஆறு, ஏழு, எட்டாம்
வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் பாடப்பிரிவு உள்ளது. பள்ளியில் மின் இணைப்பு
துண்டிக்கப்பட்டதால் கம்ப்யூட்டர் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாதம்தோறும் சி.ஆர்.சி.,
மீட்டிங் நடைபெறும். இதில் மாணவர்களுக்கு நடத்தப்படும் கல்வி குறித்து
கம்ப்யூட்டரில் "சிடி' மூலம் அதிகாரிகள் பயிற்சி அளிப்பர். 15 பள்ளிகளை
சேர்ந்த ஆசிரியர்கள் பயிற்சி பெறுவர். மின் இணைப்பு துண்டிப்பால், இம்
மாதம் அக்கூட்டம் நடைபெறவில்லை. மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த, ஊராட்சி
நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும்
ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.