திருப்பூர் : கோவையில்
மூன்று நாட்கள் நடக்கும் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப கண்காட்சியில்
பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 14 பஸ்களில், விவசாயிகள்
அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை
சார்பில், கோவை மண்டல கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப
கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, கோவை அவிநாசிலிங்கம் பல்கலை அருகில் உள்ள
ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில், வரும் 28 முதல் 30 வரை, காலை
10.00 முதல் இரவு 7.00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. 80 அரங்குகளில்
கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும்
மீன் வளர்ப்பு தொடர்பான கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற உள்ளது.
கோவை,
திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள்
பயன்பெறும் வகையில், இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்படுவதால்,
அம்மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், கோவை அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 14 பஸ்களில் அழைத்துச்
செல்லப்படுகின்றனர்.
கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி, ஆராய்ச்சி மைய
தலைவர் செல்வராஜ் கூறுகையில், ""கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள்,
உதவி பேராசிரியர்கள், கருத்தரங்கில் பேச உள்ளனர்; பயனுள்ள அரிய தகவல்களை,
விவசாயிகள் பெற முடியும். உணவு மீன்கள் வளர்ப்பு, அலங்கார மீன்கள்
வளர்ப்பு, மண்ட லத்தில் உள்ள கால்நடை இனங்கள், கால்நடை வளர்ப்பில் கடனுதவி
பெறும் வழிமுறை, மானி யங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி
விளக்கப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.