அவிநாசி : "கறவை மாடுகளுக்கான தீவனங்கள் விலை உயர்ந்துள்ளது. ஆனால், பால் விலை மட்டும் உயரவில்லை,' என பால் உற்பத்தியாளர்கள் கவலையோடு தெரிவித்தனர். நடப்பாண்டில்
பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், விவசாய பணிகள் பாதித்துள்ளன.
டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்களை பார்த்து,
விவசாயிகள், தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாத கொடுமை ஒருபுறமிருக்க, கறவை மாடுகளுக்கான தீவனங்கள் விலை பன்மடங்கு எகிறி வருகிறது.
மழை இல்லாததால், மாடுகளுக்கு முக்கிய உணவான
சோளப்பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. அவிநாசி வட்டாரத்தில்
பெரும்பாலான இடங்களில் எங்கு பார்த்தாலும் கருகிய சோளப்பயிர்களே தென்படுகின்றன. கடந்தாண்டு
22 கட்டு கொண்ட சோளத்தட்டு ரூ.500க்கு விற்றது; அதன் விலை இப்போது
ரூ.1,300; ரூ.500க்கு விற்பனையான 50 கிலோ தவிடு ரூ.650; கிலோ ரூ.11க்கு
விற்ற உளுந்து குருணை ரூ.18; ரூ.12க்கு இருந்த தேங்காய், கடலை புண்ணாக்கு
ரூ.17; ஒரு கிலோ ரூ.3க்கு கிடைத்த மக்காச்சோள மாவு ரூ.13; ரூ.800க்கு
விற்கப்பட்ட 50 கிலோ மாட்டுத்தீவனம் ரூ.1,400 என மாட்டு தீவனங்களின் விலை பட்டியல் எகிறி உள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்ட பாரதிய கிஸான் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:மழையில்லாததால்,
ஆழ் துளை கிணற்றில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி பெயரளவுக்கு விவசாயம்
செய்கிறோம். பசு மாட்டை வைத்து பிழைக்கும் சிறு, குறு விவசாயிகளை, தீவனம்
விலை உயர்வு நசுக்குகிறது. மானாவாரியாக விளையும் சோளத்தட்டை கொடுக்கலாம்
என்றால், தண்ணீர் இல்லாமல் அதுவும் கருகி நிற்கிறது.
ஒரு லிட்டர்
பாலுக்கு ரூ.1 உயர்த்தி கொடுத்தால், மறுநாளே, டீக்கடைகளில் ஒரு டீக்கு ரூ.2
ஏற்றுகின்றனர். விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களின் ஜீவாதார பிரச்னைகளில்
அரசு தலையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக, பால் கொள்முதல்
விலையை உடனே உயர்த்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.