கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகத்தில், காட்டு யானைகள் சேற்றில் குளித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க துவங்கியுள்ளன.
முதுமலை
புலிகள் காப்பகத்தில் தற்போது வறட்சி ஏற்பட துவங்கியுள்ளது. இதனால், வனப்
பகுதி பசுமை இழந்து வருவதுடன், நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து
வருகிறது. காலநிலையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பகல் நேரத்தில்
வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், வன விலங்குகள், நிழல் தரும்
மரத்தின் அடியில் படுத்து ஓய்வெடுக்க துவங்கியுள்ளன. ஆனால், எப்போதும்
உணவுக்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள், வெயிலின் தாக்கத்தினால்
சிரமப்பட்டு வருகின்றன. இதன் தாக்கத்தை போக்க, யானைகள் நீர் குட்டைகளில்
சேற்று நீரை, தும்பி கையால் உடலில் தெளித்து கொண்டு, பின் சேற்றில் படுத்து
உருண்டு, குளியலில் ஈடுபட்டு உற்சாகமடைகின்றன.
வனத்துறையினர்
கூறுகையில் "தற்போது நிலவும் காலநிலையில் யானைகள் வெப்பத்தின்
தாக்கத்திலிருந்தும், கொசு கடியிலிருந்தும் எளிதாக தப்பித்துக் கொள்ள மண்
குளியல் உதவுகிறது' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.