பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள், 467 மனுக்களை கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
பொதுமக்களிமிடருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் (பொறுப்பு) சுப்ரமணியன், அதை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்து, குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம், முதலிடத்தை பிடித்த கோதைமீனாட்சி என்ற மாணவிக்கு, மூவாயிரம் ரூபாய் மற்றும் செல்வகுமார் என்ற மாணவனுக்கு, இரண்டாயிரம் ரூபாய்க்கான செக்கை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 36 வயதுள்ள தாய் ஒருவர், பிறந்து, 25 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை கலெக்டர் (பொறுப்பு) சுப்ரமணியனிடம், தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பதற்காக ஒப்படைத்தார். அந்த தாய்க்கு இக்குழந்தை நான்காவது குழந்தை என்றும், சில நாட்களுக்கு முன் அவருடைய கணவர் திடீர் என்று இறந்துவிட்டதால், தனக்கு எந்த ஆதரவும் இல்லாத நிலையில், ஏற்கனவே உள்ள மூன்று குழந்தைகளையும் பராமரிப்பதற்காகவும், பிறந்த குழந்தையின் எதிர்கால நலனை கருதியும், இக்குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்துள்ளதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.
இந்த பெண்ணுக்கு விதவை உதவித்தொகை வழங்கிடவும், தையல் மிஷின் வழங்கி, அவருக்கு வருமானம் கிடைத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.