லாலாப்பேட்டை: "கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில், கூடுதல் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை கோவக்குளத்தில் உள்ளது. கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பகுதியிலிருந்து, தினமும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மக்கள், சிகிச்சைக்காக கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். தற்போது மருத்துவ மனையில், மூன்று டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
இந்நிலையில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், சர்க்கரை நோய் ஆகிய சிகிச்சைக்கு, போதுமான அளவில் டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் பலமணி நேரம் காத்திருந்து டாக்டரிடம் பரிசோதனை செய்து, சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், வயதான நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே, "மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்கவும், எக்ஸ்ரே பிரிவு, ரத்த பரிசோதனை ஆகிய பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்யவும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.