ஓசூர்: ""ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்து விரைவில் இரு மாவட்ட மக்களுக்கும் காவிரி குடிநீர் வழங்கும் பணியை தமிழக முதல்வர் துவக்கி வைப்பார்,'' என அமைச்சர் முனுசாமி பேசினார்.
ஓசூர் அடுத்த மாசிநாயனப்பள்ளி, கோவிந்த அக்ரஹாரம், சேவகானப்பள்ளி, சத்தியமங்கலம், பஞ்சாக்கிபுரம், கோபனப்பள்ளி, தும்மனப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த, ஐந்து ஆயிரத்து, ஏழுபேருக்கு, இரண்டு கோடியே, 50 லட்ச ரூபாய் மதிப்பிலான விலையில்லா மின் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் ராஜேஸ் தலைமை வகித்தார். விலையில்லா மின்பொருட்களை வழங்கி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி பேசியதாவது:
விலையில்லா மின்பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு கடந்தாண்டு, ஆயிரத்து, 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தமிழகம் முழுவதும், 25 லட்சம் பேருக்கு மின்பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்தாண்டு, இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 35 லட்சம் பேருக்கு விலையில்லா மின்பொருட்கள் வழங்கப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைத்து கிராமங்களில் உள்ள அரிசி பெறும் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் விலையில்லா மின்பொருட்கள் வழங்கப்படும்.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை, நான்கு ஆயிதர்து 350 மெகா வாட்டாக உள்ளது. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் மின் பற்றாக்குறை ஓரளவுக்கு சரி செய்யப்படும். கடந்த ஒன்னரை ஆண்டுகளில் ஓசூர் யூனியனில் மட்டும் 100 கி.மீ., சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் நகரம் மற்றும் ஒன்றியத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஐந்து இடங்களில் நீருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சோதனை நீரேற்றம் செய்யப்பட்டு சரிபார்க்கப்படுகிறது.
விரைவில் இத்திட்டம் மக்களுக்கு அர்பணிக்கப்பட்டு இரண்டு மாவட்ட மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கும் பணியை தமிழக முதல்வர் துவக்கி வைப்பார்.
இவ்வாறு பேசினார்.
எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம், டி.ஆர்.ஓ., பிரகாசம், ஓசூர் சப்-கலெக்டர் பிரவின் பி நாயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், ஓசூர் நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, யூனியன் சேர்மேன் புஷ்பா உட்பட பலர் கலந்து கொண்டனர். தாசில்தார் சத்தியநாராயணன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.