district news | விவசாய நிலங்களில் புகும் யானைகளால் பயிர்கள் நாசம்| Dinamalar

தமிழ்நாடு

விவசாய நிலங்களில் புகும் யானைகளால் பயிர்கள் நாசம்

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்ததால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கண்ணமங்கலம் அடுத்த ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள ஆலங்காயம் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன,
நேற்று முன்தினம் இரவு வெள்ளாண்டப்பன் கோயில், பூசனைவலசை, நீப்ளாம்பட்டு, மற்றும் மலைக்கோயில் பகுதியில் முகாமிட்டன. அங்கு சம்பத்,52, என்பவரின் கூரை வீட்டை இடித்து தள்ளி, உள்ளே இருந்த நிலக்கடலை மற்றும் அரிசி மூட்டைகளை நாசம் செய்தன. அருகில் இருந்த மஞ்சள் பயிர்களை நாசம் செய்தன.
மேலும், குமார் என்பவரின் வாழைத்தோட்டம், சேட்டு என்பவரின் நெற் பயிர்கள் போன்றவற்றையும் சேதப்படுத்தின. இதையடுத்து கிராம மக்கள் திரண்டு யானைக்கூட்டத்தை விரட்டினர்.
வனக்காப்பாளர் நடேசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு இழப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தினார். யானைகள் மலையோர கிராமங்களுக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம் செய்வதுடன் விவசாயபயிர்களை பொருட்களையும் நாசம் செய்து வருவது, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை