தர்மபுரி: தர்மபுரி நகராட்சியை சுற்றியுள்ள எட்டு பஞ்சாயத்து பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாளை (டிச.,27) நடக்கும் கூட்டத்தில் தீர்மானம் மன்ற ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது.
தர்மபுரி நகராட்சி கடந்த 1964ம் ஆண்டு வரையில் டவுன் பஞ்சாயத்தாக இருந்தது. அதன் பின் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுது. கடந்த, 1971ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ம் ஆண்டு ஆகஸ்ஞூட் 31ம் தேதி முதல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது, 11.68 சதுர கி.மீட்டர் பரப்பளவும், 2001ம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில், (64 ஆயிரத்து 496) தேர்வு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன் நகராட்சியையொட்டியுள்ள இலக்கியம்பட்டி, தடங்கம், பழைய தர்மபுரி உள்ளிட்ட சில பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
தற்போது, நகராட்சியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நகராட்சியின் எல்லையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சியின் எல்லையையொட்டியுள்ள தெற்கில் இலக்கியம்பட்டி, தடங்கம், ஏ.ஜெட்டிஹள்ளி மற்றும் அதியமான்கோட்டை ஆகிய கிராம பஞ்சாயத்துக்கள் முழுவதையும் நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கில் சோகத்தூர் பஞ்சாயத்து, வடக்கில் அளே தர்மபுரி முழுமையாகவும், செட்டிக்கரையில் ஒன்று முதல் 821 கிராம புல எண்கள் உள்ளிட்ட எட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்றகனவே கடந்த 2012ம் ஆண்டு நகர எல்லை விரிவாக்கம் செய்ய கிழக்கே ஏ.கொல்லஹள்ளி கிராமத்தில் மொடக்கேரி பகுதியை தவிர்த்து, மேற்கு, வடக்கு, தெற்கில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களை முழுமையாக சேர்த்து விரிவாக்கம் செய்ய கலெக்டர் வழியாக அரசுக்கு முன் மொழிவுகள் அனுப்பபட்டது.
இதில், அதியமான்கோட்டை, ஏ.ஜெட்டிஹள்ளி, தடங்கம் பஞ்சாயத்துக்களை தவிர பிற பஞ்சாயத்துக்கள் புல எண்கள் விடுபட்டு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளø முழுமையாக சேர்த்து முன்மொழி அனுப்ப அறிவுரைகள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது, தர்மபுரி நகராட்சியை சுற்றியுள்ள பஞ்சாயத்து பகுதிகளை நகராட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான மன்ற ஒப்புதல் பெறுவதற்கு நாளை நடக்கும் நகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்களின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்படுகிறது.
* ஃப்ளக்ஸ் போர்டு வைக்க தடை: தர்மபுரி நகராட்சி பகுதியில், ஃ ப்ளக்ஸ் போர்டு மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைக்க புதிய விதிமுறைகள் கடைப்பிடிக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை ஆணையிட்டுள்ளது. புதிய நடைமுறை குறித்தும், பேனர்கள் வைக்க தடை குறித்தும் நாளை நடக்கும் கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்படுகிறது.
இதில், கல்வி நிறுவனங்கள், பள்ளிகூடம், பட்டறை, மருத்துவமனை முன் பேனர்கள் வைக்க அனுமதியில்லை. சாலை மற்றும் சாலைகள் சந்திப்பு, நான்கு ரோடு பாதைகளில், 150 மீட்டருக்குள் வைக்க அனுமதியில்லை. சாலைகளில் செங்குத்தாக வைக்கவும் அனுமதியில்லை, 10 அடிக்கு குறைவான அகலம் உள்ள சாலை மற்றும் 40 அடிக்கு குறைவான சாலையில் இரண்டு பக்கமும் அனுமதியில்லை. இந்த புதிய நடைமுறைகள் உள்ளிட்ட நாளை நடக்கும் கூட்டத்தில், 94 தீர்மானங்கள் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் வைக்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.