தஞ்சாவூர்: நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 750 கிலோ பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
தஞ்சை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், 40 மைக்ரானுக்கு குறைந்த தடிமனுள்ள பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிப்பது என, சமீபத்தில் நகராட்சி தலைவர் சாவித்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில கடைகளில் மறைத்து வைத்து, பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை அடைத்து, வியாபாரிகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் உடல் ஆரோக்கியமும் கெடுகிறது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, தஞ்சை நகராட்சி அதிகாரிகள் அடிக்கடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்திரி, கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோர் உத்தரவுப்படி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராம், ஜோசப் சேவியர், ராமச்சந்திரன், மேற்பார்வையாளர்கள் அர்ஜூனன், மணிவண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர், தஞ்சை கீழவாசல் கடைத்தெரு பகுதியில் சோதனையிட்டனர்.
அப்போது, பாம்பாட்டி தெரு பகுதியில், இரண்டு கடைகள் மற்றும் டாஸ்மாக் கடை ஒன்றில் என, மொத்தம், 750 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளை கண்டுபிடித்தனர். இவற்றின் மொத்த மதிப்பு, 35 ஆயிரம் ரூபாய் ஆகும். இதையடுத்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, இனிமேல் பயன்படுத்தக்கூடாது என, நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளை கடுமையாக எச்சரித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.