district news | முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்குவோம் எம்.ஜி.ஆர்., நினைவு நாளில் உறுதி - Jayalalitha | Dinamalar

தமிழ்நாடு

முதல்வர் ஜெ.,வை பிரதமராக்குவோம் எம்.ஜி.ஆர்., நினைவு நாளில் உறுதி

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கும்பகோணம்: திருவிடைமருதூரில் நடந்த எம்.ஜி.ஆர்., நினைவு நாள் கூட்டத்தில், "எம்.பி., தேர்தலில், 40 தொகுதிகளையும் கைப்பற்றி, முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்குவோம்' என, உறுதியேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், நேற்று முன்தினம் காலை திருவிடைமருதூர் ஒன்றிய அ.தி.மு.க.,வினர் கூடினர். பேரூர் செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். பின் ஒன்றிய செயலாளரும், யூனியன் தலைவருமான அசோக்குமார் தலைமையில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் ஊர்வலம் துவங்கியது.
ஊர்வலத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ., தவமணி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் ராஜேந்திரன், யூனியன் துணைத்தலைவர் பாலமுருகன், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் முத்துராமலிங்கம், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் சுந்தர்ராஜன், சூரியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் சேகர், பாண்டியன், கமால்பாட்சா, ஜெயந்தி, வளர்மதி, சேகர், கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், மாலதி, பட்டம்மாள், சரிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மவுன ஊர்வலம் திருவிடைமருதூர் தபால் அலுவலகம் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை வரை சென்றது. அங்கு யூனியன் தலைவர் அசோக்குமார், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின் அ.தி.மு.க.,வினர், யூனியன் தலைவர் அசோக்குமார் முன்னிலையில், "வரும் எம்.பி., தேர்தலில், 40 தொகுதிகளையும் கைப்பற்றி, முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்குவோம்' என்று உறுதியேற்றனர்.
முன்னதாக ஆடுதுறை ரயிலடி அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு யூனியன் தலைவர் அசோக்குமார் மாலை அணிவித்தார். தேப்பெருமாநல்லூரில் அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை