திருச்சி: அ.தி.மு.க., கொள்கைப்பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது.
இதுகுறித்து திருச்சி அ.தி.மு.க., மாநகர் மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவின்படி, அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கியும், மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு, தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் கருணாநிதியை கண்டித்தும், இன்று மாலை, 6 மணிக்கு, திருச்சி புத்தூர் நால்ரோட்டில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
திருச்சி அ.தி.மு.க., மாநகர் மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் தலைமை வகிக்கிறார். கட்சியின் கொள்கைப்பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் சிவபதி, எம்.பி.,குமார், எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி, மேயர் ஜெயா, துணை மேயர் ஆசிக்மீரா உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், அனைத்து அணிகளைச் சேர்ந்த செயலாளர்கள், முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று, பொதுக்கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.