ஆலங்குடி: அரிசிக்கடைக்காரர் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெட்டான் விடுதி சந்தைப்பேட்டை பகுதியில், ராமசாமி என்பவர் அரிசிக்கடை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கறம்பக்குடி வட்ட வழங்கல் அலுவலர் செல்வகணபதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகர், செல்வகணபதி மற்றும் வருவாய்துறை ஊழியர்கள், ராமசாமியின் அரிசி குடோனில் நேற்று அதிகாலை, 3 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, 1,400 கிலோ ரேஷன் அரிசி, பல மூட்டைகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். பதுக்கலில் ஈடுபட்ட ராமசாமியை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆலங்குடி பகுதிகளில், 1,400 கிலோ ரேஷன் அரிசி பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
*ஆலங்குடியில் அமோகம்: தற்போது ஆலங்குடி அருகே பதுக்கல் ரேஷன் அரிசி பிடிப்பட்டுள்ளது. ஆலங்குடி மார்க்கெட் பகுதியில் உள்ள பல அரிசிக்கடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, வழங்கல் அதிகாரிகள் ஆலங்குடி பகுதிகளில் உள்ள அரிசிக்கடைகளில் ஆய்வு செய்து, பதுக்கல் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யவேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.