மன்னார்குடி: மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவுக்கு இலக்கிய விருது வழங்கும் விழா, சுந்தரக்கோட்டைசெங்கமலத்தாயார் கல்லூரியில் நடந்தது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் திவாகரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அமுதா, முன்னாள் எம்.எல்.ஏ., மன்னை அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவுக்கு இலக்கிய விருது மற்றும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திவாகரன் வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் ராஜராஜேஸ்வரி எழுத்தாளரின் அறிமுக உரையாற்றினார்.
விழாவில் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா பேசியதாவது:
என் போன்ற எழுத்தாளர்கள் நல்ல நூல்களை எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். எத்தனை நூல்கள் வெளி வந்தாலும், இந்த உலகம் இன்னும் மாறவில்லை. அதனால் எழுதாமல் இருக்கமுடியாது. நல்ல நூல்கள் வெளி வராவிட்டால், நாடு இன்னும் மோசமாகி விடும். இன்றைய தலைமுறை பெண்கள் சமூகத்துக்காகவும், நாட்டுக்காகவும் நல்ல படைப்பாளிகளாக உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர்கள் ஜெயந்தி, கமலா, மாணவிகள் அபிநயா, சசிகலா ஆகியோர் எழுத்தாளரின் படைப்புகள் குறித்து பேசினர். டாக்டர் அசோக்குமார், அரிமா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.