Advertisement
அதிவேகமாக வந்த லாரிகளுக்கு சிறை அந்தியூரில் பொதுமக்கள் அதிரடி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2012
02:32

அந்தியூர்: அந்தியூர் புதுப்பாளையத்தில் அதிவேகமாக வந்த, பத்து டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
அந்தியூர் அருகே புதுமேட்டூர், சின்னத்தம்பிபாளையம், பிரம்மதேசம், வெள்ளையம்பாளையம் உட்பட பல இடங்களில் செங்கல் சூளை இயங்கி வருகிறது. செங்கல் தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப் பொருளான செம்மண், வெள்ளித்திருப்பூர், குருவரெட்டியூர், எண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. செங்கல் சுடுவதற்கு பயன்படும் மரங்கள், தென்னை மட்டைகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்படுகின்றன.
டிப்பர் லாரிகள் மூலம் லோடு ஏற்றும் செம்மண், பாதுகாப்பற்ற முறையில் மேற்கூரையில், "படுதா' போர்த்தாமல் கொண்டு வரப்படுகின்றன. இதனால், வழி நெடுகிலும் லாரியில் இருந்து செம்மண் சிதறுவதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், மக்களும் பாதிக்கப்பட்டனர்.
அளவுக்கு அதிகமான செம்மண் பாரம் ஏற்றும் டிரைவர்கள், அதிவேகமாக செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும், டிரைவர் என்ற பெயரில், பல டிப்பர் லாரிகளை லைசென்ஸ் இல்லாதவர்களே இயக்குவதாகவும், மது அருந்தி லாரி ஓட்டுவதாகவும், 18 வயது பூர்த்தியாகாதவர்களுமே டிரைவர்களாக இருப்பதாகவும், புகார் எழுந்தது.
செங்கல் சூளைக்கு மண் ஏற்றும் லாரிகளால், பல முறை விபத்து நடந்தும் உரிமையாளர்களும், டிரைவர்களும் விதிமுறையை மதிப்பதில்லை. விபத்து நடக்கையில் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் உள்ளூர் போலீஸார், "கவனிப்பால்' கண்டுகொள்வதில்லை.
இச்சூழ்நிலையில், நேற்று காலை, அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி, வேகமாக வந்த டிப்பர் லாரி டிரைவர்களை, மெதுவாக செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தினர். ஆனாலும், டிரைவர்கள் வேகமாக லாரிகளை ஓட்டியதால், கொதிப்படைந்த மக்கள், பத்து டிப்பர் லாரிகளை சிறைபிடித்தனர். தகவலறிந்த, அந்தியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, அதிக பாரம் ஏற்றியும், அதிவேகமாகவும் வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.