ஈரோடு: மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அதிகாரிகள், யாரும் கேள்வி கேட்காமல் இருக்க, ஏலம் நடத்தி பிரச்னைக்கு தீர்வுகாண, மாநகராட்சி மன்றத்தில் அனுமதிகோரியுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி, சாதாரண அவசரக்கூட்டம் நாளை நடக்கிறது. மன்ற கூட்டத்தில், மாநகராட்சி குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண, மின்வெட்டு சரிகட்ட ஜெனரேட்டர் வாங்க உள்ளனர். மூலப்பாளையத்தில், 19 லட்சம், கொள்ளம்பாளையம் ஹவுசிங் போர்டில், 22 லட்சம், லோட்டஸ் மருத்துவமனையில் பகுதியில், 13.50 லட்சம், முத்தம்பாளையம் ஹவுசிங் போர்டு பகுதியில், 13.50 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஜெனரேட்டர் வாங்க உள்ளனர்.
மாநகராட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, 20 லட்சம் மதிப்பீட்டில் பொருட்கள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளனர். குப்பை பிரச்னைக்கு தீர்வாக, 9.21 லட்சத்தில், 25 டிம்பர் பின்களும், 3.22 லட்சத்தில், 22 தள்ளுவண்டிகளை வாங்க உள்ளனர்.
பாதாள சாக்கடை திட்டப்பணியால் பாதித்த, சம்பத் நகர் ரோடு, 96 லட்சத்திலும், வீரப்பம்பாளையத்தில் மெயின்ரோடு, 18.50 லட்சத்திலும் புதுப்பிக்க உள்ளனர்.
பஸ் ஸ்டாண்டில் புதிய போலீஸ் அவுட்போஸ்ட் அமைக்கவும், மாநகராட்சி அலுவலத்தில் உள்ள நினைவு தூணில், கடிகாரத்துக்கு பதில், மாநகராட்சி சின்னம் பொருத்தவும், மூடிய பெரியார் நகர் மற்றும் சூரம்பட்டி பூங்காவை தனியார் மூலம் பராமரிக்க மன்றத்தில் அனுமதி கோரவுள்ளனர்.
மாநகராட்சியில் சைக்கிள் ஸ்டாண்ட், ஆட்டோ, டாக்ஸி ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடங்கள், தங்கும் விடுதி, பொருள் பாதுகாப்பு அறைக்கு உள்ளிட்ட, 52 எண்ணங்களுக்கு காலக்கெடு முடிவதால், குத்தகை மூலம், வரிவசூல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளனர்.
நேதாஜி வணிக வளாகம், லூம்வேல்டு வணிக வளாகம், நேதாஜி காய்கறி மார்க்கெட் ஆகியவற்றில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்படுத்திய இலவச பார்கிங்கை, ஆளும்கட்சி கவுன்சிலர் ஆக்கிரமித்து, பல ஆண்டாக கட்டணம் வசூலித்து வருகிறார்.
தவிர, லூம்வேல்டு வணிக வளாக நுழைவாயிலில், அனுமதி பெறாமல் விதிமுறை மீறி ஜூஸ் கடை ஒன்றையும் வைத்துள்ளார். ""கடந்த மன்ற கூட்டங்களில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கமிஷனர் விஜயலட்சுமி கூறினார்.
ஆனால், இன்று வரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இலவச பார்க்கிங் இடத்தை குத்தகைக்கு விட்டு, கட்டணம் வசூலிக்க, ஒப்பந்தப்புள்ளி கோரி, நாளை நடைபெறும் மன்ற கூட்டத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.
அத்து மீறும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காமல், மக்களை துன்புருத்துவோருக்கு ஏதுவாக, இதுபோன்ற செயல்களில், மாநகராட்சி இறங்கியது சரியா, என எதிர்கட்சியினர் குமுறி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.