நாமக்கல்: ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாடப்புத்தகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, மூன்று பருவமாக பிரிக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது. இரண்டாம் பருவத் தேர்வு, தற்போது நடந்து வருகிறது. மூன்றாம் பருவம், ஜனவரி மாதம் துவங்குகிறது. அதற்குரிய பாடப்புத்தகம், அந்தந்த மாவட்டத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்வதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டது.
"அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், பள்ளித் துவங்கியதும், அந்தந்த பள்ளிக்கு தேவையான புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.