குற்றாலம் : குற்றாலம் பழத்தோட்ட அருவி பகுதியில் உள்ள எக்கோ சுற்றுலா பூங்கா பற்றிய விளக்கங்களை பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படுமென மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.நெல்லை மாவட்ட கலெக்டராக பதவியேற்றுள்ள சமயமூர்த்தி நேற்று குற்றாலத்திற்கு வருகை தந்தார். குற்றாலம், மெயின்அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளையும் பூங்கா பகுதிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வரால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்ட தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான எக்கோ சுற்றுலா பூங்காவினை கலெக்டர் சமயமூர்த்தி பார்வையிட்டார்.அங்கு அமைக்கப்பட்டுள்ள செடிகள், நீரூற்று, புல்வெளிகள் ஆகியவற்றை பார்வையிட்ட கலெக்டர் கூறியதாவது:-குற்றாலத்தில் சாரல் காலகட்டங்களில் திடீர், திடீரென மழை பெய்யக்கூடும். அப்போதைய நிலையில் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பார்வையிடும்போது மழையில் நனையாமல் இருக்கும் வகையில் ஆங்காங்கே ஷெட்டுகள் அமைக்கப்படும். மேலும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி டைனிங் டேபிள் வசதி ஏற்படுத்தி தரப்படும். இங்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்து மரங்களின் பெயர்களை பொருத்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இங்குள்ள செடி, கொடி, மரங்களின் பலன்கள் குறித்தும் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் அறிந்திடும் வகையில் ஏற்பாடு மேற்கொள்ளப்படும். சுகாதாரத்தை மேம்படுத்திட குப்பை தொட்டி வசதியும் செய்து கொடுக்கப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். மேலும் சீசன் காலகட்டங்களில் இப்பூங்காவினை பராமரிக்க சுயஉதவிக்குழுகளை சேர்ந்தவர்கள் தற்காலிகமாக பணியமர்த்திடவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.மாவட்ட கலெக்டருடன் தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராஜரவிச்சந்திரன், மேலாளர் முத்துமாலை, தென்காசி தாசில்தார் தேவபிரான், வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர், தோட்டக்கலைத்துறையினர் வருகை தந்தனர்.பாக்ஸ் : குற்றாலத்தில் மெயின் அருவி உள்ளிட்ட முக்கியபகுதிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி மெயின் அருவி பகுதிகளில் முழுமையான அளவில் சுகாதார பணிகளை மேற்கொள்ள டவுன் பஞ்., நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். ஆங்காங்கே காணப்படும் கழிவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திடவும், ஐந்தருவி பகுதிகளிலும் சுகாதாரத்தை முறையாக கடைபிடிக்கவும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.