திருநெல்வேலி : சங்கர்நகரில் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி முதல் நாள் ஆட்டத்தில் 8 மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன.இந்தியா சிமென்ட்ஸ் சார்பில் ஐ.சி.எல்., மகாவீர்சந்த் நினைவு கோப்பை - 2012க்கான மாவட்டங்களுக்கு இடையிலான 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி சங்கர்நகர் இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. மாவட்ட கிரிக்கெட் கழக செயலாளர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார். போட்டியில் 31 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன. காலையில் முதல் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 126 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நாகப்பட்டணம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 94 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இரண்டாம் போட்டியில் சிவகங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 105 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய புதுக்கோட்டை அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.மூன்றாம் போட்டியில் நீலகிரி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 85 ரன்கள் எடுத்தது. எதிர்த்து ஆடிய விருதுநகர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 61 ரன்கள் பெற்று தோல்வியடைந்தது.நான்காம் போட்டியில் திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 110 ரன்கள் எடுத்தது. எதிர்த்து ஆடிய கரூர் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 30 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.மாலையில் நடந்த முதல் போட்டியில் கடலூர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 130 ரன்கள் எடுத்தது. எதிர்த்து ஆடிய தேனி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 86 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.இரண்டாம் போட்டியில் கன்னியாகுமரி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 75 ரன்கள் எடுத்தது. எதிர்த்து ஆடிய திருச்சி அணி 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 76 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.மூன்றாம் போட்டியில் நாமக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 71 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய திருவண்ணாமலை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 73 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.நான்காம் போட்டியில் ராமநாதபுரம் அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 76 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தூத்துக்குடி அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 63 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.இன்று காலை, மாலை 8 போட்டிகள் நடக்கிறது. 30ம் தேதி போட்டி நிறைவு பெறுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.