நாமக்கல்: நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பணியிடத்துக்கு, திருச்சி மாவட்ட உதவி இயக்குனர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
அவர், இரு தினங்கள் மட்டுமே அலுவலகம் வருவதால், அலுவலக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட ஜீப், வெறும் காட்சிப் பொருளாக உள்ளது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில், உதவி இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது.
அந்த பணியிடத்துக்கு, திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சாமிநாதன், பொறுப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாரத்தில், இரு தினங்கள், அவர், நாமக்கல் மாவட்டம் வருகிறார். இதுதவிர, அலுவலகத்தில், ஒரு இளநிலை உதவியாளர், ஜீப் டிரைவர் பணியில் உள்ளனர். அதிகாரி இல்லாத காரணத்தால், இளநிலை உதவியாளர் அலுவலகத்தின் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், உதவி இயக்குனர் இருக்கும் சமயத்தில் மட்டும் அலுவலக ஜீப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில், அலுவலக ஜீப் பயன்படுத்தப்படாமல், வெறும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. அதனால், அலுவலகம் தொடர்பாக வெளியே சென்று மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து மேற்கொள்ள இயலுவதில்லை.
எனவே, உதவி இயக்குனர் இல்லாத சமயத்திலும், அலுவலக பயன்பாட்டிற்கு ஜீப் பயன்படுத்த, துறையின் உயரதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என, தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.