நாமக்கல்: "ஊட்டியில், ஜனவரி, 7 முதல், 12ம் தேதி வரை, கோவை ராணுவ ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் பல்வேறு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு நடக்க உள்ளது' என, நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் பங்கையர்செல்வி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
ஊட்டியில், ஹெச்.ஏ.டி.பி., திறந்தவெளி மைதானத்தில், ஜனவரி, 7 முதல், 12ம் தேதி வரை, கோவை ராணுவ ஆள்சேர்ப்பு நிலைய அலுவலர்கள் மூலம் பல்வேறு பணிகளுக்கான தேர்வு நடக்க உள்ளது. அதன்படி, சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் டேர்டஸ் மேன், சோல்ஜர் கிளார்க், சோல்ஜர் ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல் கேட்டகிரீஸ் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இப்பணியிடங்களுக்கு, 1989ம் ஆண்டு மே, 14ம் தேதி முதல், 1994ம் ஆண்டு நவம்பர், 14ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தகுதியுடையவளாவர். சோல்ஜர் ஜெனரல் டூட்டிக்கு, 1991ம் ஆண்டு மே, 14ம் தேதி முதல், 1994ம் ஆண்டு நவம்பர், 14ம் தேதிக்கு இடைபட்ட காலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தகுதியுடையவர்களாவர்.
சோல்ஜர் டெக்னிக்கல் பணிக்கு, ப்ளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் பயின்றவராக இருத்தல் வேண்டும். சோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட் பணிக்கு, ப்ளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில், 50 சதவீத மதிப்பெண்ணும், பிற பாடத்தில், 40 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ள, நாமக்கல் மாவட்ட இளைஞர்கள், தங்களது கல்விச் சான்று, ஜாதிச் சான்று உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு, 7ம் தேதி காலை, 5.30 மணிக்கு, ஊட்டி ஹெச்.ஏ.டி.பி., திறந்வெளி மைதானத்தில் ஆஜராக வேண்டும். மேலும், பத்து பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ, எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியல் என்.சி.சி., ஏ, பி, சி சான்று மற்றும் ரிலேசன்சிப் சான்று ஆகியவற்றை நான்கு செட் அட்டெஸ்டு பெற்று எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.