சேலம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நேற்று கிறிஸ்துவ தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள், ஆண்டுதோறும் டிசம்பர், 25ம் தேதி, இயேசுநாதரின் பிறந்த தினத்தை, கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில், நேற்று அதிகாலை, 4 மணி முதல் சிறப்பு பிõர்த்தனைகள் நடந்தது.
* சேலம் சி.எஸ்.ஐ., லெக்லர் நினைவாலயத்தில் நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. காலை, 8.30 மணிக்கு திருவிருந்து மற்றும் ஞானஸ்தான ஆராதனை நடந்தது.
* சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் அதிகாலை, 4 மணிக்கு திருவிருந்து ஆராதனையும், காலை, 8.30 மணிக்கு இரண்டாவது திருவிருந்து ஆராதனையும், காலை, 10.30 மணிக்கு ஞானஸ்தான ஆராதனையும் நடந்தது. மாலை, 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் மர விழா நடந்தது.
* ஜங்ஷன் சி.எஸ்.ஐ., பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் அதிகாலை, 4 மணிக்கு முதல் ஆராதனை மற்றும் ஜெப வழிபாட்டை தொடர்ந்து காலை, 9 மணிக்கு நற்கருணை ஆராதனை முடித்து, ஞானஸ்தானம் வழங்கப்பட்டது. மாலை, 6 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடந்தது.
* நான்கு ரோடு குழந்தை ஏசு பேரலாயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணிக்கும், காலை, எட்டு மற்றும் 10 மணிக்கும் ஆராதனை செய்து, வழிபாடு நடத்தப்பட்டது. காலை, 10 மணிக்கு மேல் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மூலம் ஜெப வழிபாடு நடந்தது. மாலை, 6 மணிக்கு கலை நிகழ்ச்சி நடந்தது.
மேலும், அடைக்கலநகர் தேவாலயம், அழகாபுரம் புனித மைக்கேல் ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும், நற்கருணை ஆராதனைகள் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.