சேலம்: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி, அவரது படத்துக்கு, அ.தி.மு.க., வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 25வது நினைவு தினத்தையொட்டி, சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க.,வினர், அம்மாப்பேட்டையில் உள்ள மாநகர், மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அங்கிருந்து ஊர்வலமாக சென்று, 36வது வார்டில் அம்மாப்பேட்டை, 40 அடி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர். பின், 38வது வார்டு, காந்தி øமாதனத்தில் உள்ள வள்ளலார் மடத்தில், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள தபால் நிலைய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க., வினர், பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தினர்.
எம்.எல்.ஏக்கள் செல்வராஜ், வெங்கடாசலம், மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், மண்டல குழு தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், மாதேஸ்வரன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், மாநகராட்சி பகுதிகளில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.