முஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அருகே பராமரிப்பின்றி சிதிலமடைந்து வரும் வேணுகோபால சுவாமி கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ நெடுஞ்சேரியில் பழமை வாய்ந்த வேணு கோபாலசுவாமி கோவில் கடந்த 1975ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின்னர் அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் அவ்வவ்போது சிறு விழாக்கள் நடப்பது உண்டு.இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அறங்காவலர் நியமிப்பதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக கோவிலில் நடந்து வந்த பூஜைகள் நிறுத்தப்பட்டு, கோவில் நிர்வாகம் செய்யும் பொறுப்பை அறநிலையத்துறை எடுத்துக்கொண்டது.
இதன் பின்னர் கோவில் பராமரிப்பின்றி இருந்த காரணத்தால் தற்போது கோபுரத்தில் செடிகள் வளர்ந்து மரங்களாகி அதன் வேர்கள் கோவில் கோபுரத்தின் அஸ்திவாரம் வரை பரவி உள்ளது.இதனால் கோவில் சிதிலமடைந்து புதர்கள் மண்டி விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. மேலும், கோவிலின் உள்ளே இருக்கும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுவாமி சிலைகள் பாதுகாப்பின்றி உள்ளது. பராமரிப்பு இல்லாமல் உள்ள இக்கோவிலை சீரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.