கடலூர்:கடலூர் நகராட்சி மாதாந்திர இயல்புக் கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் நகரமன்றத்தில் வளர்ச்சிப் பணிகள், ஏரியா பிரச்னைகள் குறித்து மாதம்தோறும் அனைத்து கவுன்சிலர்கள் பங்கேற்கும் கூட்டம் நகர மன்றத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த 12ம் தேதி இயல்புக்கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நகரமன்ற தலைவர் மீது பல்வேறு புகார்களை கூறி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.அதனால் கூட்டம் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இனால் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இந்நிலையில் மீண்டும் நகர மன்ற கூட்டம் நாளை ( 27ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம் முறை கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.