vilupuram district news | வேங்கூர் சென்னை சுகர்ஸ் ஆலை சாதனைபண்ணாரி அம்மன் குழும தலைவர் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேங்கூர் சென்னை சுகர்ஸ் ஆலை சாதனைபண்ணாரி அம்மன் குழும தலைவர் பெருமிதம்

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கோவிலூர்:வேங்கூரில் சென்னை சுகர்ஸ் ஆலை வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு விழா நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த வேங்கூரில் சென்னை சுகர்ஸ் சர்க்கலை ஆலை உள்ளது. இதன் வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளை துவக்க விழா நடந்தது. வங்கியின் பிராந்திய மேலா ளர் கணேசன் வரவேற்றார்.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் நரேந்திரன், புதிய கிளையை திறந்து வைத்தார்.
பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது :இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி வங்கிக் கிளை ஒன்றை துவக்க வேண்டும் என வேங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.அதேபோல் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அதன் பயனாக இன்று புதிய கிளை துவங்கியுள்ளது.
ஒரு வங்கியின் நிர்வாக இயக்குனரே வந்து வங்கிக் கிளையை திறந்து வைத்திருப்பது நமக்கு பெருமை. இதன் மூலம் விவசாயிகளின் தேவைகளை நேரில் கேட்டு அதனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த வங்கியின் மூலம் விவசாயிகள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் பலன் அடையும் வகையில் வங்கி நிர்வாகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.இந்த ஆலை துவங்கிய இரண்டு ஆண்டில் 10 லட்சம் டன் கரும்பு அரவை செய்யும் அளவிற்கு உயர்ந் துள்ளது. இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை