கள்ளக்குறிச்சி:எலவனாசூர்கோட்டையில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் பாரை உடைத்து கடை நடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி பகுதியில் டெண்டர் பணம் செலுத்தாமல் கடை நடத்திய டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.இந்நிலையில் கள்ளக்குறிச்சி அடுத்த எலவனாசூர்கோட்டையில் டாஸ்மாக் அருகே (கடை எண் 11,781) சீல் வைக்கப்பட்ட பார் உடைக்கப்பட்டு, செயல்படுவதாக கலெக்டர் சம்பத்திற்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் நேற்று டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அண்ணாதுரை, கலால் டி.எஸ்.பி., ஜெயராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, கோவிந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜதாமரைபாண்டியன், லட்சுமி மற்றும் போலீசார் நேரில் ஆய்வு நடத்தினர்.
அங்கு சீல் உடைக்கப்பட்டு நடத்தப்பட்ட கடையில் இருந்த ஊழியர்கள் பூ.மலையனூர் சேர்ந்த சவுந்தராஜன்,22, தினகரன்,23, நொனையவாடி சேர்ந்த சிவக்குமார்,42, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.பாரில் விற்பனை செய்யப்பட்ட 26 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கள்ளக்குறிச்சி கலால் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.