பெரியகுளம்: கும்பக்கரை அருவி பகுதியில், இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அமைக்கப்பட்ட மருத்துவ மரப்பூங்கா பராமரிப்பு இல்லாததால் மரங்கள் இன்றி பொட்டல் காடாகிவிட்டது.பூங்காவை எங்கே என தேடும் நிலைதான் உள்ளது. கொடைக்கானல் வனக்கோட்டம், பெரியகுளம் வனச்சரகத்திற்கு உட்பட்டது கும்பக்கரை அருவி. பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது. தற்போது அருவியில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
கும்பக்கரை அருவியின் அருகில், மருத்துவ மரப்பூங்கா உள்ளது. வனத்துறை நிர்வாகத்தினர் முன்பு பராமரித்து வந்தனர். இங்கு வேப்பமரக்கன்று, புங்கை, நெல்லி, நாவல், தாணி, சீதா உள்ளிட்ட ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சில மரக்கன்றுகள் மரங்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு மரக்கன்றின் கீழ் பகுதியில் மரங்கள் குறித்த மருத்துவக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி, பள்ளி, மாணவ, மாணவிகள் மருத்துவ மரப்பூங்காவிற்கு அழைத்துச்செல்லப்படுவர்.
மரங்கன்றுகளின் வகைகள் எடுத்துக்கூறப்பட்டு, இளைய தலைமுறையினருக்கு மரங்களை பற்றிய நேசிப்புத்தன்மையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தும் நோக்கில் மருத்துவமரப்பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது வனத்துறையினரின் பராமரிப்பு இல்லாததால், தானாக வளர்ந்த மரக்கன்றுகளை தவிர, பல மரக்கன்றுகள் காய்ந்து போனதால் பூங்கா பொட்டல் காடாகிவிட்டது. இதனால் சுற்றுலாபயணிகள் அங்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். வனத்துறை நிர்வாகம் மீண்டும் பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.