E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அப்பிபட்டியில் போலீசார் குவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2012
05:06

சின்னமனூர்:அப்பிபட்டியில் இடப்பிரச்னையால், மக்கள் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டு பிரச்னையை தீர்த்தனர். சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் அப்பிபட்டி, பஸ்டாண்ட் அருகில் 49 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடம் இங்குள்ள ஒக்கலிகர் மகாஜன சங்கத்தினர் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது. 2002 ல் இந்த ஊரை சேர்ந்த ஆங்கன் என்பவருக்கு இந்த இடத்திலிருந்து 15 சென்ட்டை வருவாய்துறையினர் தவறுதலாக பட்டா வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஒக்கலிக்கர் சமுதாயத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில், இடம் அந்த சமுதாயத்தினருக்கு உரியதுதான் எனவும், அவர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. அதன்படி அந்த சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த இடத்தில், மேலும் பிரச்னை ஏற்படாதவாறு தடுக்க, வேலி அமைக்கப்பட்டு போர்டும் ஊன்றப்பட்டது. இந்நிலையில், மூன்று தினங்களுக்கு முன் ஊராட்சி கூட்டம், தலைவர் பழனியம்மாள் தலைமையில் நடந்துள்ளது. இக்கூட்டத்தில், "ஒக்கலிக்கர் சமுதாயத்தினருக்கான இடம் எனக்கூறப்படும் இடம், அனைத்து சமுதாயத்தினருக்கும் சொந்தமான இடம். இதனை அனைத்து சமுதாயத்தினருக்கென மாற்ற வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை, ஊராட்சி தலைவரின் கணவர் மாடசாமி தலைமையில், முருகன், மதிவாணன், ராஜாமணி, செல்வம், பிரபு, ராமச்சந்திரன், ராஜ், ராஜேஸ்கண்ணா, பாண்டியன் உள்ளிட்டோரும் மற்றும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இடத்தின் உள்ளே சென்றுள்ளனர்.
இதனால் அங்கு பதட்டமான நிலை உருவானது. தகவல் அறிந்து ஏ.டி.எஸ்.பி., செல்வராஜ், ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,விஜயபாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் பாலகுரு, வினோஜி ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஒக்கலிக்கர் சமுதாயத்தினர் மற்றும் அனைத்து சமுதாய மக்களை அழைத்து, இடம் தொடர்பான பிரச்னையை கோட்டில் பார்த்துக் கொள்ளவும், இடையில் யாரும் பிரச்னை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.