தேனி:மேகமலை வன உயிரின காப்பக ஊழியர்கள், அலுவலக வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 80 சதவீதம் வனப்பகுதிகளை ஒருங்கிணைத்து, மேகமலை வன உயிரின காப்பகமாக அறிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் காப்பகத்திற்கு தனி வார்டன் நியமிக்கப்பட்டுள்ளார். காப்பகம் உருவாக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் முறையான அலுவலகம் ஒதுக்கப்படவில்லை. தேனி டி.எப்.ஓ., அலுவலகத்தின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டடத்தில் வன உயிரின காப்பக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. காப்பக டி.எப்.ஓ., அமரக்கூட இடவசதி இல்லை. மழைக்காலத்தில் ஆவணங்களை பாதுகாக்க முடியாது. சாதாரண நேரங்களில் கூட அலுவலகத்தை பூட்ட உரிய வசதிகள் இல்லை. வன உயிரின காப்பக வார்டனே, ரெகுலர் டி.எப்.ஓ., அலுவலகத்தில், உள்ள ஒரு அறையில் அமர்ந்து பணிகளை கவனித்து வருகிறார். காப்பக ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதற்கேற்ற வகையில் முறையான அலுவலகம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.