விரைவில் புதிய அறிவியல் கொள்கை: மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: அறிவியல் துறையில் பெண்களின் பங்கு மற்றும் வரும் 2020-ம் ஆண்டில் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக உருவாவது குறித்த கொள்கைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு: வரும் ஜனவரி 3-ம் தேதி மேற்குவங்க மாநில தலைநகர் ‌கோல்கட்டாவில் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேச உள்ளார். அப்‌போது அறிவியல்,தகவல் மற்றும் அறிவியல் துறையில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்துவது போன்ற கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவை அதிகரிப்பது குறித்த அறிவிப்பும் கொள்கை முடிவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஓப்புதல்: கடந்த 2003-ம் வகுக்கப்பட்ட அறிவியல் கொள்கை தற்போது பல்வேறு மாறுதல்களுடன் புதிய கொள்கையாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இன்று பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வரும் 2020-ம் ஆண்டிற்குள் அறிவியல்துறையில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தி்யா நிலைநிறுத்திக்கொள்ள புதிய கொள்கை பயன்படும் என இத்துறை அதிகாரிகள் நம்‌பிக்கை தெரிவித்துள்ளனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mustafa - Dammam,சவுதி அரேபியா
26-டிச-201214:27:06 IST Report Abuse
Mustafa அறிவியல் துறையில் சிறந்தவர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல விடாமல் தடுத்து நம் நாட்டிலேயே அவர்கள் நல்ல முறையில் பணியாற்ற என்ன கொள்கைகள் தேவையோ அதனை வுடனடியாக செயல்படுத்தினால் போதும். மற்ற நாடுகளைவிட நாம் வெகுவாக விரைந்து முன்னேறி விடலாம். ( இப்படி என் போன்று விமர்சிப்பவர்கள் மட்டும் வெளிநாட்டில் இருந்தால் போதுமா என்று கேட்காதீர்கள் நல்ல மாடு உள்ளூரில் விலைபோகும் நானெல்லாம் கள்ளமாடு )
Rate this:
Share this comment
Cancel
sarathkumar - kattumannarkoil  ( Posted via: Dinamalar Windows App )
26-டிச-201212:17:36 IST Report Abuse
sarathkumar எந்த ஒன்றை சொன்னாலும் எதிர்பார்க்கப் படுகிறது, நம்பப்படுகிறது என்று வானிலை அறிக்கை சொல்லும் ரமணா போல சொல்கிறார். ஏன் அதை உறுதியாக சொன்னால் தான் என்ன
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
26-டிச-201208:25:52 IST Report Abuse
தமிழன் முதலில் தமிழ் நாட்டில் இருக்கும் பிரச்சன்னைகளை சரி செய்து விட்டு பிறகு உங்க அறிவியல் கொள்கையை பற்றி திட்டம் தீட்டுங்கள் . தமிழ் நாடும் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதை தாங்கள் உணர்ந்து தமிழக மக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செயுங்கள் . உங்க இத்தாலி முதலாளியிடம் தமிழ் நாட்டு மக்கள் நம் இந்திய மக்கள் தான் என்றும் அவர்கள் தந்த வெற்றியில் தான் நம்ம காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்கிறது என்ற உண்மையை சொலுங்கள் இந்த வெற்றி தொடர வேண்டும் என்றால் தமிழகத்தின் அனைத்து அடிப்படை ( தண்ணீர் , மின்சாரம் & நிதி ) வசதிகளையும் நிவர்த்தி செய்யவேண்டும் என்று உங்க முதலாளியிடம் எடுத்து சொலுங்கள் ........
Rate this:
Share this comment
Cancel
doraiswamy - chennai,இந்தியா
26-டிச-201207:38:40 IST Report Abuse
doraiswamy ஐயோ பாவம், பிரதமர். என்னமெல்லாமோ சொல்லி பார்க்கிறார். ஒன்னும் நடக்கல்ல. பாராளுமன்றத நடத்த முடியல. வன்முறைய , அடக்க முடியல, விலைவாசிய குறைக்க முடியல. சிக்கல்னா உடனே கபில், திவாரி , குர்ஷித் போன்றோர் ஏதாவது அறிக்கை விடறாங்க , பேசாம அவங்க எல்லாரையும் பிரதமர்கள் ஆக்கி விடலாம்.
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
26-டிச-201207:30:53 IST Report Abuse
Baskaran Kasimani அறுபத்தைந்து ஆண்டுகளில் வராத அறிவு எப்படி திடீர் என்று வரும். அடிப்படையை பிடிக்காமல் ஏதோ கொள்கை மாற்றம் செய்தால் அறிவியல் வளர்ந்து விடும் என்றால் அது கற்பனையில் வேண்டுமானால் வரலாம். கூடா நட்பு இவர்களை இந்தப்பாடு படுத்துகிறது.
Rate this:
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
26-டிச-201207:16:04 IST Report Abuse
thirumalai chari ஆதரவில்லாதாரின் அறிவில்லா கொள்கை.
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201207:04:39 IST Report Abuse
Guru "இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு-" அறிவியளிலுமா காங்கிரஸ்... இப்போது புரிகிறது ஏன் நாம் இன்னும் அறிவியல் வளர்ச்சி அடைய வில்லைஎன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்