கன்னிவாடி:எம்.அம்மாபட்டியில் புகுந்த காட்டுமாடு தாக்கி, ஐந்து பேர் காயமடைந்தனர். முள்புதருக்குள் புகுந்த மாட்டை, வனத்துறையினர் ஆறு மணிநேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.கன்னிவாடி அருகே எம்.அம்மாபட்டியைச் சேர்ந்த சண்முகம் மனைவி செந்தாமரை, 32. நேற்று, தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, வழி தவறி அங்கு வந்த காட்டுமாடு தாக்கியது.
அக்கம்பக்கத்தினர் விரட்டியதால், கிராமத்திற்குள் புகுந்தது. சொக்கலிங்கபுரம் சுப்பையா வீட்டிற்குள் புகுந்த மாடு, அவரது மனைவி மாரியம்மாளை, 45, தாக்கியது. அங்கிருந்த வெளியேறி, கால்நடைகள், ரோட்டில் நடந்து சென்ற சிலரையும் தாக்கியது.செந்தாமரை, மாரியம்மாள் உள்பட, ஐந்து பேர் காயமடைந்தனர். பின்னர், மக்காச்சோள காடுகளில் புகுந்து, ரெட்டியார்தரிசு கருவேல முள் புதருக்குள் சென்றது. அங்கு வந்த வனத்துறையினர், பாரஸ்டர் சக்திவேல் தலைமையில் காடுகளில் தேடினர். ஆறு மணிநேரம் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை. வனத்துறையினர் கூறுகையில், ""காமாட்சிபுரம் மலைக்கரடு பகுதியில், பாதுகாப்பு வனத்திற்குள் சென்றிருக்கலாம். தொடர் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.