நத்தம்:நத்தம்மற்றும் கொசவப்பட்டி, வேம்பார்பட்டி பகுதி கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடந்தது. நத்தம் புனித ராயப்பர் ஆலயத்தில் பாதிரியார் அந்தோணிச்சாமி மற்றும் துணைத்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தனர்.* சி.எஸ்.ஐ., ஆலயத்தில் எர்னஸ்ட் ராஜப் பா, வில்சன் சாம்ராஜ் தலைமை வகித்தனர்.* கொசவபட்டி ஞானப் பிரகாசியர் ஆலயத்தில் பாதிரியார் ஸ்டீபன் கஸ்பர் மற்றும் கமலநாதன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. வேம்பார் பட்டி புனித சவே ரியார் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்ததுது.* செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடந்த கூட்டு திருப்பலியில் பாதிரியார் கிறிஸ்துராஜ், உதவி பாதிரியார் அந்தோணி கிறிஸ்டோ, தலைமை வகித்தனர். * கொடைக்கானல் மூஞ்சிக்கல் திருஇருதய தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, பூந்தமல்லி இறையியல் கல்லூரி பேராசிரியர் பெர்னாட்ஷா, மதுரை குருத்துவக்கல்லூரி பேராசிரியர் லாரன்ஸ் தலைமையிலும், கோக்கர்ஸ் வாக்கில் உள்ள கிறிஸ்துஅரசர் தேவாலயத்தில் பாதிரியர் சதீஸ் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சலேத் அன்னை ஆலயம், உகார்த்தே நகர் ஆரோக்கிய அன்னை ஆலயம், சென்பகனூர் புனித சேவியர் தேவாலயம், அட்டுவம்பட்டி உட்பட பல தேவாலயங்களில் நேற்று காலை 9 மணிக்கும் சிறப்பு பிரார்த்தனைகளும்,திருப்பலியும், ஆராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. வத்தலக்குண்டு பாதிரி யார்கள் ஜெயராஜ், ரெக்ஸ்பீட்டர், உதவி பாதிரியார் வின்சென்ட் ஆகியோர் திருப்பலி நடத்தினர். வத்தலக்குண்டு, மரியாயிபட்டி, சின்னுபட்டி, கரட்டுப்பட்டி, வெங்கடாஸ்திரி கோட்டை, மேலக்கோயில்பட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதி மக்கள் பங்கேற்றனர். *மேலக்கோயில்பட்டி மாலை சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு புனித அந்தோனியார் மின் சப்பரத்தில் வலம் வந்தார். வாணவேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.