Advertisement
விவேகானந்தர் பிறந்த நாள்: மன உறுதி ஏற்பு நாள் விழா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,06:07 IST

புதுச்சேரி:"விவேகானந்தர் ஆன்மிகத் துறவி மட்டுமல்ல, அவர் ஒரு தேசியத் துறவி' என்று மன உறுதி ஏற்பு நாள் நிகழ்ச்சியில் விவேகானந்தரின் விழாக்குழு கோட்ட அமைப்பாளர் பாலாஜி பேசினார்.விவேகானந்தரின் 150ம் ஆண்டு பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாட நாடு முழுவதும் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திரா மற்றும் விவேகானந்தர் 150ம் ஆண்டு குழு சார்பில், புதுச்சேரி நகரக் குழுவை சேர்ந்தவர்களுக்கான மன உறுதி ஏற்பு நாள் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு லெனின் வீதியிலுள்ள கீர்த்தி மகாலில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சிக்கு, 150ம் ஆண்டு குழு மாநில அமைப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.குழுவின் கோட்ட அமைப்பாளர் பாலாஜி விழாவில் பேசியதாவது:நாட்டிலுள்ள மற்ற துறவிகளுக்கும், சுவாமி விவோகானந்தருக்கும் வித்தியாசம் உண்டு. விவேகானந்தர் ஆன்மிகத் துறவி மட்டுமல்ல, அவர் ஒரு தேசியத் துறவி.நாடு பலமாக இருக்க, இந்துக்கள் பலமாக இருக்க வேண்டும். உடல் பலமே உயிர் பலம். உலகிற்கு பல விஷயங்களை அவர் வாழ்ந்து உணர்த்தியுள்ளார்.
இவரைப் பார்த்து தான் காந்தி, தாகூர், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களுக்கு தேச பக்தி பல மடங்கு பெருகியது. விவேகானந்தரின் பிறந்த நாளான வரும் ஜனவரி 12ம் தேதி அனைவரும் தங்கள் வீடு, தெரு உள்ளிட்ட இடங்களில் அவரது படங்களை வைத்து மலரஞ்சலி செலுத்த வேண்டும்' என பேசினார்.விவேகானந்தர் தியானம், மன உறுதி ஏற்பு நடந்தது. தினமலர் நிர்வாக இயக்குனர் @க.வெங்கட்ராமன், செல்வராஜ் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.